பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரியங்கா.. என்ன காரணம்? தீயாய் பரவும் தகவல்
பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரியங்கா திடீரென வெளியேறி இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். தற்போது இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் மிக விருவிருப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
இந்த சீசனில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமானவர்களை மட்டுமே போட்டியாளர்களாக விளையாட வைக்காமல் பல்வேறு கஷ்டங்களை கடந்து தங்களது துறையில் வளர்ந்துள்ள கானா பாடகி, கூத்து பட்டறை கலைஞர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
இறுதி கட்டத்தை எட்டிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று மக்கள் ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கிராண்ட் பினாலே நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
ராஜு பிக் பாஸ் டைட்டில் வின்னர் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பிரியங்கா இரண்டாம் இடத்தை பிடிப்பார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிரியங்கா, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.