பிக்பாஸ் வீட்டில் கணவர் பற்றி வாய் திறக்காத பிரியங்கா! வெளியான உண்மை காரணம்
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5 கடந்த வாரம் முடிவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பிரியங்கா பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வந்தபோது கூட பிரியங்காவின் கணவர் வரவில்லை. மேலும் ஒரு எபிசோடில் கூட பிரியங்கா தன்னுடைய கணவர் பற்றி வாய் திறந்து பேசியதில்லை.
இதனால் இருவருக்கும் ஏதாவது பிரச்சனையா? கணவரை பிரியங்கா விவாகரத்து செய்து விட்டாரா என பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. இப்படியான நிலையில் தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ளார் பிரியங்கா.
அதாவது பிக் பாஸ் குழுவில் போட்டியாளர்களின் உறவினர்கள் பணியாற்றினால் அவர்கள் பற்றி நிகழ்ச்சியில் பேசக்கூடாது என்பது விதிமுறை.
அதனால் தான் அவரைப் பற்றி பேசவில்லை என கூறியுள்ளார். மேலும் பிரியங்காவின் கணவர் பிரவீன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்சோல் மேனேஜராக பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.