டெல்லி கேபிட்டல்ஸை அலறவிட்ட ஆர்யா..அனல் பறந்த ஆட்டம்
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர் ப்ரியன்ஷ் ஆர்யா அதிரடி அரைசதம் விளாசினார்.
ப்ரியன்ஷ் ஆர்யா
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி தரம்சாலாவில் நடந்து வருகிறது.
Welcoming the pacers, Priyansh Arya style 😎
— IndianPremierLeague (@IPL) May 11, 2026
Towering sixes to get #PBKS going 📈
Updates ▶️ https://t.co/wHhflKIvCR#TATAIPL | #KhelBindaas | #PBKSvDC pic.twitter.com/xCKBmyy9Y5
நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தெரிவு செய்து களமிறங்கியது.
தொடக்க வீரர் ப்ரியன்ஷ் ஆர்யா சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் பஞ்சாப் அணி 2.4 ஓவர்களிலேயே 50 ஓட்டங்களை எட்டியது.
சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ப்ரியன்ஷ் ஆர்யா (Priyansh Arya) 24 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதில் 6 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |