19 சிக்ஸர்கள்! 68 பந்துகளில் 181 ஓட்டங்கள் விளாசிய கேப்டன்..இமாலய சாதனை
Priyansh arya 181 runs in t20 cricket: டெல்லி அணித்தலைவர் ப்ரியான்ஷ் ஆர்யா, தமிழ்நாடு அணிக்கு எதிராக 68 பந்துகளில் 181 ஓட்டங்கள் விளாசினார்.
சையத் முஷ்தாக் அலி தொடரின் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி அணித்தலைவர் ப்ரியான்ஷ் ஆர்யா 68 பந்துகளில் 181 ஓட்டங்கள் விளாசினார்.
ப்ரியான்ஷ் ஆர்யா
தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான சையத் முஷ்தாக் அலி தொடர் டி20 போட்டி இந்தூரில் நடந்தது.
Captain Priyansh smashed 181 runs from 68 balls including 7 fours and 19 sixes for Delhi in this Syed Mushtaq Ali Trophy . What a Historic Knock by Captain Priyansh Arya ..!!💥❤️ https://t.co/M0RsaFOzCB
— Nafees (@Nafees_018) November 24, 2026
முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ஓட்டங்கள் குவித்தது.
அணித்தலைவர் ப்ரியான்ஷ் ஆர்யா (Priyansh Arya) 68 பந்துகளில் 181 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 19 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். குர்ஜப்நீதி சிங், ஷாரூக்கான், மணிமாறன் மற்றும் ராஜ்குமார் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
முதல் இந்திய வீரர்
பின்னர் ஆடிய தமிழ்நாடு அணி 18.3 ஓவர்களில் 159 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக துஷார் 31 ஓட்டங்களும், ஷாரூக் கான் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.
திக்வேஷ் சிங் ரதி 4 விக்கெட்டுகளும், சுயாஷ் ஷர்மா 3 விக்கெட்டுகளும், மயங்க் யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் 181 ஓட்டங்கள் விளாசியதன் மூலம், கே.எல்.ராகுலின் டி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் (152) விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை முறியடித்தார்.
