உலகைவிட்டு வெளியேறும் உணர்வு! CSKக்கு எதிராக 42 பந்தில் 103 ரன் விளாசிய இளம் வீரர்
ஷ்ரேயாஸ் தன்னை நோக்கத்துடன் துடுப்பாடுமாறு கூறியதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசிய ப்ரியான்ஷ் ஆர்யா தெரிவித்துள்ளார்.
ப்ரியான்ஷ் ஆர்யா
ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ப்ரியான்ஷ் ஆர்யா ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்கவிட்டார்.
அதனைத் தொடர்ந்து ருத்ர தாண்டவமாடிய அவர், 42 பந்துகளில் 9 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் விளாசினார்.
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ப்ரியான்ஷ் ஆர்யா (Priyansh Arya) ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
மகிழ்ச்சியாக உணர்கிறேன்
பின்னர் பேசிய அவர், "உலகை விட்டு வெளியேறும் உணர்வு, நாம் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஆனால், நான் அணிக்கு இன்னும் அதிகமாக பங்களிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஷ்ரேயாஸ் என்னை நோக்கத்துடன் துடுப்பாடுமாறு கூறினார்.
கடந்த போட்டியில் நான் அவுட் ஆன பிறகு, உங்கள் முதல் பந்திலேயே நீங்கள் அதை செய்யுங்கள் என்றார் அவர். அதேபோல், நேஹால் துடுப்பாட வந்தபோது, நான் அவரிடம் ஒன்று, இரண்டு என ஓட்டங்களை எடுப்போம் என்றேன்.
ஆனால், அவர் உங்கள் மனதில் முதலில் தோன்றுவதை வைத்து விளையாடுங்கள் என்று என்னிடம் கூறினார். எல்லா பந்துவீச்சாளர்களும் சிறந்தவர்கள், எவர் வேண்டுமானாலும் எனக்கு நெருக்கடி கொடுக்க முடியும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |