விம்பிள்டன் டென்னிஸ்... முதல் சுற்றில் வெளியேறும் வீரர்கள் அள்ளிச் செல்லும் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் முதல் சுற்றுலேயே வெற்றி வாய்ப்பை இழந்து வெளியேறும் வீரர்கள் அள்ளிச்செல்லும் பரிசு தொகை குறித்து வெளியான தகவல் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது.
வெற்றி வாய்ப்பை இழக்கும் வீரர்
இது தொடர்பில் பிரபல செய்தி ஊடகத்தின் விளையாட்டு பிரிவு பிரபலம் ஒருவர் தெரிவிக்கையில், விம்பிள்டன் போட்டிகளில் முதல் சுற்றில் வெற்றி வாய்ப்பை இழக்கும் வீரர் ஒருவருக்கு பரிசு தொகையாக 55,000 பவுண்டுகள் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
@getty
விம்பிள்டன் ஒற்றையர் போட்டியில் முதல் சுற்றில் வெற்றி வாய்ப்பை இழப்பவர் பிரித்தானியாவில் சராசரி ஆண்டு ஊதியத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு தொகையை பரிசாக அள்ளிச் செல்கிறார்.
விம்பிள்டன் தொடர் தொடங்குவதற்கு முன்பே, மூன்று தகுதிச் சுற்றில் தோல்வியடைபவர்களுக்கு, 12,000 பவுண்டுகள், 21,000 பவுண்டுகள் மற்றும் 36,000 பவுண்டுகள் என ஒவ்வொரு சுற்றிற்கும் அளிக்கப்படுகிறது.
வெற்றியாளருக்கு 2.3 மில்லியன்
விம்பிள்டன் போட்டிகளுக்கான மொத்த பரிசு தொகை தற்போது 44,700,000 பவுண்டுகள் என கூறப்படுகிறது. அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை இழக்கும் வீரருக்கு 600,000 பவுண்டுகள் அளிக்கப்படுகிறது.
@getty
இறுதிப் போட்டியில் தோல்வியடையும் வீரருக்கு 1.1 மில்லியன் பவுண்டுகளும் வெற்றியாளருக்கு 2.3 மில்லியன் பவுண்டுகளும் பரிசாக அளிக்கின்றனர்.
இந்த நிலையில், இரண்டுமுறை வெற்றியாளரான ஆண்டி முர்ரே, இந்த ஆண்டு குறைந்தது 85,000 பவுண்டுகள் வரையில் பரிசாக அள்ளிச் செல்வார் என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |