லண்டனில் பூமா மற்றும் Zara நிறுவனங்களின் கடைகளை மூட வைத்த பாலஸ்தீன ஆதரவாளர்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகை விற்பனை களைகட்டிவரும் நிலையில் லண்டனின் பிரபலமான ஷொப்பிங் பகுதியில் அமைந்துள்ள பூமா மற்றும் Zara கடைகளை பாலஸ்தீன ஆதரவாளர்கள் மூட வைத்துள்ளனர்.
ஆயிரம் பேர்கள் கொண்ட குழு
தொடர்புடைய இரு கடைகள் மட்டுமின்றி, ஆக்ஸ்போர்டு வீதி மற்றும் ரீஜண்ட் வீதியில் அமைந்துள்ள கடைகள் பல சனிக்கிழமை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குறைந்தது ஆயிரம் பேர்கள் கொண்ட குழு ஒன்று பாலஸ்தீன ஆதரவு பேரணியை இந்த இரு வீதிகளிலும் முன்னெடுத்துள்ளனர். காஸா மக்கள் வெடிகுண்டுக்கு இலக்காகும் நிலையில், இஸ்ரேல் ஆதரவு நிறுவனங்களின் கடைகளில் இருந்து எவரும் பொருட்கள் வாங்குவது முறையல்ல என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் ஆதரவு நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களிடம் கோரியுள்ளனர். இனப்படுகொலையை ஆதரிக்கும் Zara, இன்னும் ஒளிந்திருக்க முடியாது என்றும் முழக்கமிட்டுள்ளனர்.
@pa
போர் நிறுத்தம் ஏற்படும் வரையில்
இந்த மாத தொடக்கத்தில் Zara வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்று, காஸா மக்களை கேலி செய்வதாக உள்ளது என குறிப்பிட்டு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அந்த விளம்பரத்தை Zara நிறுவனம் நீக்கியது.
இதேப்போன்று பூமா கடைகள் முன்பும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படும் வரையில், இஸ்ரேல் ஆதரவு நிறுவனங்கள் மூடப்படும் என்றே பாலஸ்தீன ஆதரவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
@pa
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |