லண்டனில் நினைவேந்தல் நாளில் பாலஸ்தீன ஆதரவு பேரணி... இறுதியில் பணிந்த பிரதமர் ரிஷி சுனக்
நினைவேந்தல் நாளில் பாலஸ்தீன ஆதரவு பேரணி முன்னெடுப்பது மரியாதையற்ற செயல் என்று சாடிய பிரதமர் ரிஷி சுனக், இறுதியில் பணிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீன ஆதரவு பேரணி
லண்டனில் நினைவேந்தல் நாளில் பாலஸ்தீன ஆதரவு பேரணி முன்னெடுப்பதற்கு ரிஷி சுனக் நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மட்டுமின்றி, கலவரம் மூள வாய்ப்பிருப்பதாகவும் பயத்தை ஏற்படுத்தியது.
@rex
நாட்டின் மிக முக்கியமான நாளில் பாலஸ்தீன ஆதரவு பேரணி முன்னெடுப்பது முறையல்ல எனவும், கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பாலஸ்தீன ஆதரவு பேரணி முன்னெடுக்கப்படும் என்றே அதன் ஒருங்கிணைப்பாளர்கள் திட்டவட்டமாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை முன்னெடுக்கப்படும் பாலஸ்தீன ஆதரவு பேரணியின் போது கலவரம் ஏற்பட்டால் அதற்கு அந்த நிர்வாகிகளே பொறுப்பு என மாநகர காவல்துறை தலைவர்களை சந்தித்த பின்னர் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
@alamy
போராட்டம் நடத்துவதற்கான உரிமை
சனிக்கிழமை மத்திய லண்டனில் முன்னெடுக்கப்படும் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் சுமார் 700,000 மக்கள் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மாநகர பொலிஸ் தலைவர் முன்னெடுத்த சந்திப்பில், கலவரம் வெடிக்காமல் இருக்க அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் சுனக் தெரிவிக்கையில், சுதந்திரம் என்பது அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமை எனவும், கருத்துவேறுபாடு இருந்தாலும் அவர்களின் உணர்வுகளை மதிக்கிறோம் எனவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
@afp
மேலும், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும் பகுதியில் அவர்களின் பேரணியால் சிக்கல் ஏற்படாதவாறு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் ரிஷி சுனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |