ரிஷி சுனக் ஒரு தேங்காய்... பாலஸ்தீன ஆதரவு பேரணியில் லண்டன் பெண் ஏந்திய பதாகையால் சிக்கல்
பாலஸ்தீன ஆதரவு பேரணியில் பிரதமர் ரிஷி சுனக் தொடர்பில் இனவெறி பதாலை ஏந்திய பெண் ஒருவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிஷி சுனக் ஒரு தேங்காய்
முதற்கட்ட விசாரணையில் குறித்த பெண் ஒரு ஆசிரியர் எனவும், பிரதமர் ரிஷி சுனக்கை அவர் ஒரு தேங்காய் என சித்தரித்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.
Credit: Twitter/Met Police
சனிக்கிழமை லண்டனில் முன்னெடுக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு பேரணியில் 36 வயதான Marieha Mohsin Hussain என்ற ஆசிரியர் கலந்துகொண்டுள்ளார். இவர் ஏந்தியிருந்த பதாகையில், பிரதமர் ரிஷி சுனக் மற்றும் முன்னாள் உள்விவகார செயலர் சுயெல்லா பிரேவர்மேன் ஆகிய இருவரையும் தேங்காய் என சித்தரிக்கப்பட்டிருந்தது.
இது, ஒருவர் தமது இனத்தைக் காட்டிக் கொடுத்ததைக் குறிக்கும் ஒரு இனவெறி அவதூறாக கருதப்படுகிறது. ஆனால் அவரது நண்பர்கள் தெரிவிக்கையில், அவர் அப்படியான நபரல்ல என்றும், தவறான செயல்களை ஊக்குவிக்கும் குணம் கொண்டவரல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.
Credit: Twitter/Met Police
யூத சமூகம் அனுபவித்த அச்சம்
மட்டுமின்றி, தாம் ஏந்தியிருக்கும் பதாகையால் சிக்கல் ஏற்படும் என்பதை அவர் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை என்றே நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே பொலிசார் தெரிவிக்கையில், இதுவரை கைது நடவடிக்கை ஏதும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், ஆனால் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு பேரணியால் யூத சமூகம் அனுபவித்த அச்சம் மற்றும் மிரட்டல் வருந்தத்தக்கது என பிரதமர் சுனக் தெரிவித்துள்ளார்.
@afp
தொடர்புடைய பேரணியில் நடந்த குற்றச்செயல்கள் சட்டத்தால் எதிர்கொள்ளப்படும் என்றார். சனிக்கிழமை பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்து கொண்டவர்களில் 7 பேர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதுடன், 145 பேர்கள் கைதாகியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |