தடையை மீறி ஆர்ப்பாட்டம்: பிரான்ஸ் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் கூடி நேற்று இரவு பிரான்ஸ் கலவர பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம்
இஸ்ரேல்- பாலஸ்தீன போர் மிகவும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் ஏவுகணைகள் மூலம் உருக்குலைத்து வருகிறது.
இதற்கிடையில் பாலஸ்தீன மற்றும் ஹமாஸ் ஆதரவாளர்கள் பல நாடுகளின் முக்கிய நகரங்களில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில், பிரித்தானியாவின் லண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், மற்றும் ஜேர்மனியின் முக்கிய வீதிகளில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிரான்ஸில் பொலிஸாருடன் தள்ளுமுள்ளு
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், ஹாமஸ் அமைப்பினருக்கு ஆதரவாகவும் எந்தவொரு ஆர்ப்பாட்டமும் செய்ய தடை விதிப்பதாகவும், இத்தகைய போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு அறிவித்து இருந்தது.
Thousands of Pro-Palestinian/Hamas Supporters are Clashing tonight with French Riot Police in Paris after the French Government announced earlier today that moving forward any kind of Pro-Palestinian Demonstration was Banned and that anybody who Participates in these Events will… pic.twitter.com/5bTx2DXTRk
— OSINTdefender (@sentdefender) October 12, 2023
இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் கூடி நேற்று இரவு ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நேற்று இரவு ஆயிரக்கணக்கான ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் பிரான்ஸ் கலவர பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |