சுவிட்சர்லாந்து முழுவதும் பாலஸ்தீனிய ஆதரவு போராட்டங்கள்
சுவிட்சர்லாந்து முழுவதும் பாலஸ்தீனிய ஆதரவு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இஸ்ரேல் ஆதரவு பேரணிகள்
நேற்று முன்தினம், ஜெனீவாவில் இஸ்ரேல் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கூடி பேரணிகள் நடத்தினார்கள்.
சுவிட்சர்லாந்து, ஹமாஸ் அமைப்பை தீவிரவாத அமைப்பு என வகைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளதை, இஸ்ரேல் ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
CNN
பாலஸ்தீனிய ஆதரவு போராட்டங்கள்
நேற்று முன்தினம், ஜெனீவாவில் இஸ்ரேல் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கூடி பேரணிகள் நடத்திய நிலையில், நேற்று, பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் கூடி பேரணி நடத்தியுள்ளார்கள்.
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை அறிந்தும், ஒரு கூட்டத்தையே அழிக்கும் உரிமை இஸ்ரேலுக்குக் கிடையாது என பேரணியில் பங்கேற்ற சிலர் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்கள்.
NBC News
அத்துடன், ஹமாஸ் அமைப்பை தீவிரவாத அமைப்பு என சுவிட்சர்லாந்து முத்திரை குத்தக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், இன்றும் சில நகரங்களில் பாலஸ்தீனிய ஆதரவு பேரணிகளுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், பொலிசார் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகிறார்கள்.
Daily Sabah
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |