கொரோனாவால் 3 மில்லியன் மக்கள் பாதிப்பு: உறுதிப்படுத்திய சுவிஸ் அரசாங்கம்
சுவிட்சர்லாந்தில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் மூன்றில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் பெரும்பாலானோருக்கு அது தெரிந்திருக்கவில்லை எனவும் அரசு தரப்பு மதிப்பிட்டுள்ளது.
கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல் கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்கு சுவிஸ் மக்கள் பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த 2.8 மில்லியன் மக்களில் வெறும் 650,000 பேர்கள் மட்டுமே, வெளிப்படையான அறிகுறிகளால் உரிய சோதனைக்கு உட்பட்டுள்ளனர்.
இந்த மக்கள் கொரோனா நோயிலிருந்து மீண்டதாக அரசு உறுதி செய்துள்ள நிலையில், இவர்கள், தடுப்பூசி போடாவிட்டாலும் கொரோனாவுக்கான சான்றிதழைப் பெறுவார்கள் என சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த கொரோனா சான்றிதழைப் பெற்றுக் கொண்டவர்கள் கோடை காலம் முதல் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், கொரோனா பாதித்திருப்பது அடையாளம் காணப்படாத அந்த இரண்டு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள், நோயில் இருந்து மீண்டு வந்ததாக கருதப்படமாட்டார்கள்.
அவர்களுக்கு ஆன்டிபாடி சோதனைகள் மூலம் தொற்றுநோயை மறு ஆய்வு செய்யப்படும். மேலும் சுவிட்சர்லாந்தை பொருத்தமட்டில் ஏழ்மை நிலையில் இருப்பவர்களே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதும், இறந்ததும் என்பதும் தெரிய வந்துள்ளது.
ஏழ்மை நிலையில் உள்ள பகுதிகளில் 100,000 பேர்களில் 29 பேர் மிக ஆபத்தான சூழலில் அவசர சிகிச்சை பிரிவை நாடியுள்ளனர்.
ஆனால் செல்வந்தர்கள் மிகுந்த பகுதியில் 100,000 பேர்களில் 13 பேர் மட்டுமே அவசர சிகிச்சை பிரிவை நாடியுள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.