ஜேர்மனியில் குடியமர வெளிநாட்டவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்...
ஜேர்மனியின் வளமான தொழிலாளர் சந்தைகள், உயர்ந்த ஊதியம், நல்ல வாழ்க்கைத்தரம் ஆகியவற்றால் கவர்ந்திழுக்கப்படும் வெளிநாட்டவர்கள், அந்நாட்டில் குடியமர்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆனால், குடியமரும் நோக்கில் ஜேர்மனிக்கு வரும் வெளிநாட்டவர்கள், தாங்கள் கற்பனை செய்ததுபோல் நிஜமான விடயங்கள் ஜேர்மனியில் இல்லை என தெரியவரும்போது அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.
அப்படி என்னென்ன விடயங்கள் குடியமரும் ஆசையில் ஜேர்மனிக்கு வரும் வெளிநாட்டவர்களை அதிர்ச்சியடைய வைக்கின்றன என்பதை சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றின் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில், வெளிநாட்டவர்கள் விரும்பும் நாடுகள் பட்டியலில் இடம்பெற்ற 52 நாடுகளில் ஜேர்மனிக்கு 42ஆவது இடம் கிடைத்துள்ளது.
ஜேர்மனியில் குடியமர விரும்பும் வெளிநாட்டவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகள் என்னென்ன?
மொழிப்பிரச்சினை
ஜேர்மனியில் குடியமர விரும்பும் வெளிநாட்டவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினை மொழிப்பிரச்சினை ஆகும்.
ஜேர்மனியில் குடியமரும் நோக்கத்துடன் அந்நாட்டுக்குச் சென்ற ஒருவர் தனது பர்ஸை தவறவிட்டுள்ளார். அது தொடர்பாக அவர் புகாரளிக்கச் சென்றபோது, புகார் பெறுபவர் ஆங்கிலத்தில் பேச மறுத்துவிட்டாராம். ஆக, ஆங்கிலம் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் பேச மறுத்து ஜேர்மன் மொழியில் பேசும் பலரை சந்தித்துள்ளதாக ஆய்வில் பங்கேற்ற பலர் தெரிவித்துள்ளார்கள்,
அலுவலகங்கள் முதலான இடங்களை அணுகுவது ஜேர்மனியில் கடினம்
மொழிப்பிரச்சினையைப் போலவே ஜேர்மனியில் மற்றொரு பெரிய பிரச்சினை, எதைச் செய்வதற்கும் பக்கம் பக்கமாக நிரப்பவேண்டிய ஆவணங்கள். டிஜிட்டல் மயமாக்கல் திருப்திகரமாக இல்லாததால் காகிதங்களில் செய்யப்படும் நிரவாகப்பணிகள் தொடர்பான விடயங்கள், பெரும் தொல்லையாக அமைந்துவிடுகிறது வெளிநாட்டவர்களுக்கு.
குடியிருக்க ஒரு வீட்டைக் கண்டுபிடித்தல்
தங்களுக்கு ஜேர்மானிய பெயர் இல்லாததால் குடியிருக்க ஒரு வீட்டைக் கண்டுபிடிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாக வெளிநாட்டவர்கள் உணர்கிறார்கள்.
வெளிநாட்டவர்களின் பெயரைக் கேட்டதுமே அவர்களுக்கான வாடகை அல்லது விலையை உயர்த்திவிடுகிறார்களாம் ஜேர்மானியர்கள்.
நண்பர்கள் கிடைப்பது கடினம்
வேலை, வீடு முதலான விடயங்களில்தான் பிரச்சினை என்றால், ஜேர்மனியில் ஜேர்மானிய நண்பர்கள் கிடைப்பது கஷ்டம் என்கிறார்கள் ஏற்கனவே ஜேர்மனியில் குடியமர்ந்துள்ள வெளிநாட்டவர்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.