திட்டமிட்டபடி சுவிட்சர்லாந்தில் மார்ச் 22 அன்று கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்படுவதில் சிக்கல்?
சுவிட்சர்லாந்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவத்தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி மார்ச் 22 அன்று அடுத்த கட்ட கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்படுவதில் சிக்கல் ஏற்படலாம் என தெரிகிறது.
இந்த மாதம் சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி 24 மணி நேரத்தில் சுவிட்சர்லாந்தில் 1,491பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சொல்லப்போனால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 1 முதல் சில கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டதே இந்த கொரோனா தொற்று அதிகரிப்புக்கு காரணம் என கருதப்படுகிறது.
அத்துடன், பிரித்தானிய வகை கொரோனா வைரஸும் இந்த கொரோனா பரவல் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
#CoronaInfoCH #Coronavirus #COVID19
— BAG – OFSP – UFSP (@BAG_OFSP_UFSP) March 10, 2021
10.03. Aktueller Stand sind 567 903 laborbestätigte Fälle, 1491 mehr als am Vortag. Gemeldete Tests: 32 557 in den letzten 24 Stunden.
Reproduktionszahl Re vom 26.02.2021: 1,09 https://t.co/vMBPcGwAPO pic.twitter.com/IJgaAUyHM9
திடீர் மாற்றம் பெற்ற பிரித்தானிய வகை கொரோனா வைரஸ் பயங்கரமாக பரவக்கூடியது என்பதுடன், வேகமாக பரவக்கூடியதும் என்பதால், அதுவும் இந்த கொரோனா பரவல் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம்.
இதற்கிடையில், மார்ச் 22ஆம் திகதி முதல் உணவகங்களை திறக்க அரசு திட்டமிட்டிருக்கிறது.
ஆனால், தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், மார்ச் 19ஆம் திகதி வரை நாட்டில் கொரோனா பரவல் நிலைமை என்ன என்பதைப் பொருத்தே உணவகங்களை திறக்கும் முடிவு இறுதி செய்யப்படும்.
அன்றைய நிலவரப்படி கொரோனா தொடர்ந்து அதிகரித்தவண்ணமே இருப்பது தெரியவந்தால், உணவகங்கள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளது.