பிரபல தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் காலமானார் - முதல்வர் நேரில் அஞ்சலி
பிரபல தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் காலமானார்.
ஏ.வி.எம் சரவணன்
ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனம், தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ளது.

ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ஆவிச்சி மெய்யப்பச் செட்டியாரின் மகன் ஏ.வி.எம் சரவணன் ஆவார்.
ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் மறைவிற்கு பின்னர் அவரது மகன்கள் தொழிலை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
ஏ.வி.எம் சரவணனின் வழிகாட்டுதலில், சிவாஜி, வேட்டைக்காரன், அயன், ஜெமினி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து ஏராளமான வெற்றி படங்களை ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்துள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக, ஏ.வி.எம் சரவணன் கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று காலை 5;30 மணிக்கு ஏ.வி.எம் சரவணன் காலமானதாக ஏ.வி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது.
முதல்வர் அஞ்சலி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், சூர்யா, விஷால், இயக்குனர் பி.வாசு, கவிஞர் வைரமுத்து உட்பட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு… pic.twitter.com/pzB90zbDYU
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 4, 2025
தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ - அதே அளவுக்கு ஏவி.எம். நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் திரு. சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது" என தெரிவித்துள்ளார்.
மறைந்த ஏ.வி.எம் சரவணன், இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர், அகில உலகத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர், தமிழ்நாட்டுச் சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டுக் கழக இயக்குநர், சென்னை மாநகர செரீப் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
மேலும், தமிழக அரசின் கலைமாமணி விருது புதுவை அரசின் பண்பின் சிகரம் விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |