பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரன் சந்திரசேகர் மீது மோசடி புகார்: நடப்பது என்ன?
பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரன் சந்திரசேகர்மீது பொலிசில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
தயாரிப்பாளர் ரவீந்தரன் சந்திரசேகர்
தமிழ் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் ரவீந்தரன் சந்திரசேகர். இவர் ‘முருங்கைக்காய் சிபிஸ்’, ‘நட்புனா என்னனு தெரியுமா’ என்ற படங்களை தயாரித்துள்ளார்.
சமீபத்தில் பிரபல சீரியல் நடிகை மகலாட்சுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
பரபரப்பு புகார்
இந்நிலையில், காவல்துறையில் அமெரிக்க வாழ் இந்தியர் விஜய் என்பவர், தயாரிப்பாளர் ரவீந்தரன் சந்திரசேகர் மீது பண மோடி குறித்து ஆன்லைன் மூலமாக புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் ரவீந்தர் அனுப்பிய இரண்டு வங்கி காசோலைகளை அனுப்பினார். ஆனால், அந்த இரண்டு வங்கிகளிலும் ரவீந்தருக்கு எந்த பணமும் இல்லையென்று திரும்பி வந்துவிட்டது.
இதனால், நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். நான் அவரை நல்லவர் என்று நம்பினேன். ஆனால், அவர் என்னை ஏமாற்றிவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, இது தொடர்பான தகவல் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ரவீந்தரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், ரவீந்தர் சமாதானமாக செல்வதாகவும், பணத்தை விரைவில் செட்டில் செய்து விடுவதாகவும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |