பிரித்தானியர்கள் வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்ததால் அலுவலகங்களுக்கு லாபமா நஷ்டமா? வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள்
பிரித்தானியாவில் பணியாளர்கள் வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்வது, productivityயை பாதிக்கவில்லை என பிரித்தானிய தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பணியாளர்கள் எளிதாக வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்வதற்கு பழகிக்கொண்டார்கள் என்றும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
2021இன் கடைசி சில மாதங்களில், ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு பலனளிக்கும் பணி செய்யப்பட்டுள்ளது என்பதை முதன்முறையாக கணக்கிடும்போது, கொரோனா கால்கட்டத்துக்கு முன் இருந்ததை விட, அதிக அளவில் லாபகரமான பணி செய்யப்படுள்ளதாக பிரித்தானிய தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Omicron மீண்டும் வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்யும் நிலைமையை உருவாக்கிய நிலையில், கடந்த காலாண்டில் productivity மேலும் அதிகரித்துள்ளதாக The Times பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மான்செஸ்டர் பல்கலை பேராசிரியரான Bart Van Ark என்பவர் கூறும்போது, நாம் productivity பாதிக்காதவண்ணம், வீட்டிலிருந்தபடி பணி செய்வதை கற்றுக்கொண்டுவிட்டோம் என்று கூறியுள்ளார்.
2019ஐ ஒப்பிடும்போது, 2021இன் கடைசி காலாண்டில் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு பணி செய்யப்பட்டுள்ளது என்ற கணக்கீடு, 2.3 சதவிகிதம் அதிக அளவில் பணி செய்யப்பட்டுள்ளதைக் காட்டுவதாக பிரித்தானிய தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.