கீபோர்டை 5 நிமிடங்களுக்கு மேல் தொடவில்லையெனில்.,ஊழியரை கண்காணிக்கும் கருவி
IT நிறுவனம் ஒன்று ஊழியர்களின் வேலை நேரத்தை கண்காணிக்கும் கருவியை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
15 நிமிடங்களுக்கு மேல்
முன்னணி IT நிறுவனமான Cognizant Technology Solutions, தங்கள் ஊழியர்களின் கணினி செயல்பாடு மற்றும் App பயன்பாட்டைக் கண்காணிக்க தொழில்நுட்பத்தை கொண்டுவந்துள்ளது. 
அதாவது, ஊழியர் ஒருவர் அலுவலக கணினியில் Mouse அல்லது Keyboardஐ 5 நிமிடங்களுக்கு மேல் செயலற்ற நிலையில் இருந்தால், அவர் வேலை செய்யாதவராக கருதப்படுவார். 15 நிமிடங்களுக்கு மேல் செயலற்ற நிலையில் இருந்தால், குறித்த ஊழியர் மற்ற வேலைகளில் தீவிரமாக செயல்படுவதாக கருதப்படுவார்.
இதற்காக ProHance போன்ற சிறப்பு Tracking கருவிகளைப் அந்நிறுவனம் பயன்படுத்த உள்ளது. இந்த கண்காணிப்பு அமைப்பு ஒவ்வொரு குழுவுக்கும் வித்தியாசமாக இருக்கும்.
ஆனாலும், இந்த கண்காணிப்பு மென்பொருள்தான் ஊழியரின் வேலைப் பழக்கத்தை நிமிடக் கணக்கில் துல்லியமாகப் பதிவு செய்யப் போகிறது. 
விளக்கம்
இந்நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர் திட்டங்களில், ஊழியர்களின் மடிக்கணினி செயல்பாடு, செயலி பயன்பாட்டை ProHence போன்ற கருவிகள் மூலம் கண்காணிக்கத் தனது மேலாளர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது.
Cognizant நிறுவனத்தின் இந்த செயல்முறை விமர்சனங்களை பெற்றதைத் தொடர்ந்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், "ProHence போன்ற டாஷ்போர்டுகள் மூலம், உங்கள் Login நேரம், திறந்திருக்கும் செயலிகள், ஒவ்வொரு பணிக்கும் செலவழித்த நேரம் என அனைத்து விவரங்களையும் மேலாளர்கள் பார்க்க முடியும்.
அதாவது, இந்த கண்காணிப்பு தரவு ஊழியர் செயல்திறனை மதிப்பிடவும், பதவி உயர்வு மற்றும் போனஸ் போன்ற விடயங்களை தீர்மானிக்க பயன்படுத்தப்படாது" என கூறப்பட்டுள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |