386 ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடை விதித்தது பிரித்தானியா: விவரம் செய்திக்குள்...
உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதற்கு பதிலடியாக அதிரடி நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளது பிரித்தானியா!
அதன்படி, 386 ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
எதற்காக ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தடை?
இந்த 386 ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களும், ரஷ்யா உக்ரைனின் பகுதிகளாகிய Luhansk மற்றும் Donetsk நகரங்களை குடியரசுகளாக அங்கீகரிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் ஆவர்.
ஆகவே, புடினுடைய சட்டவிரோத ஊடுருவலுக்கும், மனிதத்தன்மையற்ற போருக்கும் ஆதரவளிப்பவர்களை குறிவைக்கிறோம் என்று கூறியுள்ளார் பிரித்தானிய வெளியுறவுச் செயலரான Liz Truss.
ஆக, தடை விதிக்கப்பட்ட ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி பிரித்தானியாவுக்குள் நுழையமுடியாது. அத்துடன், பிரித்தானியாவிலிருக்கும் அவர்களுக்குச் சொந்தமான எந்த சொத்தையும் அவர்கள் அணுகவும் முடியாது.
இத்துடன் விடமாட்டோம், ரஷ்ய பொருளாதாரத்தின் மீதான நெருக்கடியை, தடைகள் மூலம் இன்னும் அதிகமாக்குவோம் என்று கூறியுள்ளார் பிரித்தானிய வெளியுறவுச் செயலரான Liz Truss.
இந்நிலையில், ரஷ்ய விமானங்களுக்கும் படகுகளுக்கும் பிரித்தானியாவுக்குள் நுழைய ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.