மோசடிகளில் சிக்கும் முதியவர்களைக் காப்பாற்ற சுவிட்சர்லாந்து திட்டம்
சுவிட்சர்லாந்தில், முதியவர்களைக் குறிவைத்து நடக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
ஆகவே, அப்படி ஏமாற்றப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சுவிஸ் மாகாணம் ஒன்றில் புதிய திட்டம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
மோசடிகளில் சிக்கும் முதியவர்களைக் காப்பாற்ற திட்டம்
தொலைபேசி வாயிலாகவும், போலி பொலிசார் மூலமாகவும் மோசடிகளில் சிக்கும் முதியவர்களைக் காப்பாற்ற சுவிட்சர்லாந்தின் Neuchâtel மாகாணத்தில் திட்டம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
மோசடிகளால் ஏமாற்றப்பட்ட முதியோருக்கு உதவுவோருக்காக, ரகசிய தொலைபேசி எண் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோர், அந்த எண் மூலமாக உதவியும் ஆலோசனையும் பெறலாம்.
இப்படி மோசடியாளர்களால் ஏமாற்றப்பட்ட பலர், தாங்கள் ஏமாற்றப்பட்டதால் வெட்கப்பட்டு அது குறித்து என்ன செய்வதென்று தெரியாமலும் இருக்கிறார்கள்.
ஆக, இந்த திட்டம் வெற்றி பெறுமானால், அது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படலாம் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |