அக்டோபரில் சுவிட்சர்லாந்தில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும்... கணித்துள்ள இணையதளம்
தடுப்பூசித் திட்டத்தை கண்காணித்துவரும் இணையதளம் ஒன்று, சுவிட்சர்லாந்தில் அக்டோபர் மாதம் வாக்கில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும் என்று கணித்துள்ளது.
இந்த கணிப்பு, தற்போது தடுப்பூசி வழங்கப்படும் வேகத்தின் அடிப்படையிலானதாகும். மேலும், ஒரு நாட்டின் மக்கள்தொகையில் 80 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டால், அந்த நாட்டில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும் என்பது ஒரு கணக்கீடாகும்.
pandemieende.ch என்ற அந்த இணையதளம், குறைந்தபட்சம் கடந்த 14 நாட்களில் தடுப்பூசி போடப்பட்டதன் வீதத்தின் அடிப்படையில் இந்த கணக்கீட்டை செய்கிறது. ஆனால் உண்மையில் இப்படித்தான் நடக்கும் என அந்த இணையதளத்தால் துல்லியமாகக் கணக்கிடமுடியாது.
காரணம், தடுப்பூசி விநியோகத்தில் தாமதம் மற்றும் புதிய திடீர்மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்கள் உருவாகும் பட்சத்தில், தடுப்பூசித் திட்டத்தில் தாமதம் ஏற்படுமானால், இந்த கணிப்பு மாறுபட வாய்ப்புள்ளது.
மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்று உருவாகும் என அந்த இணையதளம்
குறிப்பிட்டுள்ள திகதியில் மாற்றங்கள் இருந்தாலும், இந்த இணையதளம் வழங்கும்
வழிகாட்டு நெறிமுறைகள் பயனுள்ளவையாகவே உள்ளன.