கனேடியர் படுகொலையை அடுத்து... முக்கிய அமெரிக்க சீக்கியர்கள் உயிருக்கு ஆபத்து: FBI எச்சரிக்கை

Narendra Modi Justin Trudeau British Columbia
By Arbin Sep 26, 2023 09:30 AM GMT
Report

அமெரிக்காவில் சீக்கிய சமூகத்தில் முக்கியமான தலைவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எஃப்.பி.ஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகாரிகளுக்கு தொடர்பிருக்கலாம்

குறைந்தது 3 சீக்கிய தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்துள்ள FBI, இது கனேடிய சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் படுகொலைக்கு பின்னர் ஏற்படுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கனேடியர் படுகொலையை அடுத்து... முக்கிய அமெரிக்க சீக்கியர்கள் உயிருக்கு ஆபத்து: FBI எச்சரிக்கை | Prominent Us Sikhs Of Threats Fbi Warned @twitter

திட்டமிடப்பட்ட இந்த படுகொலைக்கு இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருக்கலாம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பிரதமர் ட்ரூடோவின் அந்த குற்றச்சாட்டுகளுக்கு கனேடிய மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகளின் ஒப்புதலும் இருந்துள்ளது.

ஆனால் இந்த சம்பவம் தற்போது கனடா மற்றும் இந்திய அரசுகளின் உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. கனேடிய மண்ணில் சட்டத்திற்கு புறம்பாக இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட படுகொலையாகவே இந்த விவகாரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கனேடியர் படுகொலையை அடுத்து... முக்கிய அமெரிக்க சீக்கியர்கள் உயிருக்கு ஆபத்து: FBI எச்சரிக்கை | Prominent Us Sikhs Of Threats Fbi Warned @reuters

இந்திய தரப்பில், கனடாவின் குற்றச்சாட்டுகளை மொத்தமாக மறுத்துள்ளதுடன், இது ஜோடிக்கப்பட்டவை எனவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நிஜ்ஜர் படுகொலைக்கு சில வாரங்கள் முன்னர், பிரித்தானியாவிலும் பாகிஸ்தானிலும், சீக்கிய தலைவர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

FBI அதிகாரிகளால் எச்சரிக்கை

மட்டுமின்றி, அமெரிக்க சீக்கிய காக்கஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் பிரித்பால் சிங் தெரிவிக்கையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அவரும் மற்ற இரண்டு சகாக்களும் FBI அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், பிரித்பால் சிங் உட்பட அமெரிக்க சீக்கிய தலைவர்கள் மூவரின் உயிருக்கு ஆபத்து என கூறப்படுகிறது.

மேலும், இந்த சந்திப்புக்கு 3 நாட்களுக்கு பின்னர், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் வழிமுறைகளை முன்வைத்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனிடையே, ஜூன் 22ம் திகதி அமர்ஜித் சிங் என்பவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக FBI அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கனேடியர் படுகொலையை அடுத்து... முக்கிய அமெரிக்க சீக்கியர்கள் உயிருக்கு ஆபத்து: FBI எச்சரிக்கை | Prominent Us Sikhs Of Threats Fbi Warned @afp

குறித்த நபர் நியூயார்க்கை சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் வர்ணனையாளர் ஆவால். வாஷிங்க்டன் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பும் வழியில், FBI அதிகாரிகள் இவரை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சில வாரங்களுக்கு பிறகு FBI அதிகாரிகள் நேரில் சந்தித்து விரிவான விளக்கமளித்துள்ளதாகவும் அவர் உறுதி செய்துள்ளார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் 6 பேர்கள் ஈடுபட்டதாகவும், மொத்தம் 50 தோட்டாக்கள் சுடப்பட்டதில் 34 எண்ணிக்கையில் நிஜ்ஜார் மீது பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் இது திட்டமிடப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட படுகொலை என்றே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US