பிரித்தானிய பிரதமராகியுள்ள ரிஷியின் சொத்துக்கள்: பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும்...
பிரித்தானியாவின் பிரதமராகியுள்ள ரிஷி சுனக், முன்னர் நிதி அமைச்சராக இருந்தபோதே அவரது சொத்துக்கள் குறித்த செய்திகள் வெளியாகிக்கொண்டே இருந்தன.
தற்போது, மீண்டும் அவரது சொத்துக்கள் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரிஷிக்கு பிரித்தானியாவிலும், அமெரிக்காவிலும் சொத்துக்கள் உள்ளன.
கென்சிங்டனில், சுனக்கும் அவரது மனைவியும் சேர்ந்து வாங்கிய ஒரு வீடு உள்ளது. 2010இல் வாங்கிய அந்த வீட்டின் விலை 4.5 மில்லியன் பவுண்டுகள். அந்த வீட்டில் நான்கு குளியலறைகள், இரண்டு வரவேற்பறைகள் மற்றும் மிகப்பெரிய ஒரு தோட்டம் ஆகியவை உள்ளனவாம். இந்த வீட்டில்தான் பெரும்பாலும் ரிஷி குடும்பம் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தெற்கு கென்சிங்டனில் மற்றொரு அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது.
Image: Chris Ratcliffe/Bloomberg via Getty Images
இதுபோக, லண்டனுக்கு வெளியே ஒரு பெரிய வீடு உள்ளதாம். அதைச் சுற்றிலும் இருக்கும் இடம் மட்டுமே 12 ஏக்கர்களாம். இந்த வீட்டின் விலை 1.5 மில்லியன் பவுண்டுகளாம்.
மேலும், ரிஷிக்கு அமெரிக்காவிலும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளதாம். அது ரிஷியின் மனைவி அக்ஷதா பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
இந்நிலையில், தற்போது ரிஷி பிரதமராகிவிட்டதால், அவர் முன்பு சேன்சலராக இருந்தபோது வாழ்ந்த பிரதமர் இல்லத்தில் உள்ள குடியிருப்பும் அவருடையதுதான்.
எல்லாவற்றிற்கும் மேல், Buckinghamshireஇல் அமைந்துள்ள பிரதமருக்கான Chequers என்னும் ஒரு பிரம்மாண்ட கிராமப்புற வீட்டையும் ரிஷி பயன்படுத்திக்கொள்ளலாம்.
Image: Christopher Furlong/Getty
Photo by English Heritage/Heritage Images/Getty Images