பலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பலாபழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதை சாப்பிட்டல் எப்படி உடலுக்கு நன்மைகள் கிடைக்கிறதோ அதே போல சில தீமைகளும் ஏற்படலாம்
நன்மைகள்
சிறுநீரக குழாய் புற்றுநோய் பாக்டீரியாவினால் ஏற்படும் சிறுநீரக குழாய் தொற்றுநோய்க்கு தினமும் 2 வேளை பலாப்பழ ஜூஸ் தொடர்ந்து ஐந்து நாட்கள் உட்கொண்டால் நோய் தீரும்.
வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும்.
நரம்புகளுக்கு உறுதி தரும். ரத்தத்தை விருத்தியாக்கும். பல் தொடர்பான நோய்களைப் போக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. தொற்றுக் கிருமிகளை அழிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.
தீமைகள்
பலாப்பழத்தை அளவுக்கு அதிகமாக உடகொண்டால் வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும்.
பலாபழ விதைகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் மலச்சிக்கல், கள்ளு குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்போவது, வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும்.
பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை வயிற்றுவலி போன்றவை ஏற்படும். பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டு சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும்.
பலா பிஞ்சினை அதிகமாய் உணபதால் செரியாமை, வயிற்று வலி போன்றவை ஏற்படுவதுடன் சொறி, சிரங்கு, கரப்பான், இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.