மது விருந்து... பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையில் பெண் இராணுவ வீரருக்கு ஏற்பட்ட துயரம்
பிரான்ஸ் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ மாளிகையில், இராணுவ அதிகாரி ஒருவர் பெண் இராணுவ வீரர் மீது அத்துமீறிய சம்பவத்தில் தற்போது குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி மாளிகை தலைமை அதிகாரியே வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். மூன்று இராணுவ அதிகாரிகளுக்கு பிரியாவிடை அளிக்கும் விருந்து ஒன்று ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இரவு 10 மணியளவில் விருந்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி மேக்ரான் கிளம்பிச் சென்றதாக கூறப்படுகிறது. ஜூலை 1ம் திகதி நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரி அதிகமாக மது அருந்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விருந்து நடந்த பகுதியில் இருந்து ஜனாதிபதி மேக்ரான் வெளியேறிய பிறகு, அந்த அதிகாரி பெண் இராணவ வீரர் ஒருவரை ஆசைவார்த்தை கூறி, தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் உயர்மட்ட இரகசிய கூட்டங்கள் முன்னெடுக்கும் பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று சீரழித்துள்ளார். இச்சம்பவத்திற்கு பின்னர், அடுத்த நாள் குறித்த பெண் இராணுவ வீரர் தமக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பில் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, துரித நடவடிக்கையாக தொடர்புடைய இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளவிருக்கிறார்.