புரோட்டீன் சத்து நிறைந்த கருப்பு கொண்டைக்கடலை தோசை.., எப்படி செய்வது?
Protein dos recipe- கொண்டைக்கடலை புரதம், நார்ச்சத்து, மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஒரு ஊட்டச்சத்து மிக்க உணவு.
இது உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், சர்க்கரை அளவை சீராக வைக்கவும் மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் பெரிதும் உதவுகிறது.
தாவர அடிப்படையிலான சிறந்த புரதச்சத்து கொண்டதால், தசை வளர்ச்சிக்கும், திசுக்களை சரிசெய்யவும் உதவுகிறது.
அந்தவகையில், உடலிற்கு சத்தான கருப்பு கொண்டைக்கடலை தோசை எப்படி செய்வது என்று பாரக்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்
- ரவை - 1 கப்
- தயிர் - 1 கப்
- இஞ்சி - 1 துண்டு
- பச்சை மிளகாய் - 2
- சீரகம் - 2
- மிளகு - ½ ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- உப்பு - 1 ஸ்பூன்
- தண்ணீர் - ½ கப்
- நெய்- சிறிதளவு
செய்முறை
முதலில் கருப்பு கொண்டைக்கடலையை நன்கு கழுவி இரவு முழுவதும் ஊறவைத்துக்கொள்ளவும்.
பின் மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கொண்டைக்கடலை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

அடுத்து இதில் ரவை, தயிர், நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
இத்தகடுத்து இதில் தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
இறுதியாக அடுப்பில் தவா வைத்து மாவை ஊற்றி நெய் சேர்த்து பொன்னிறமாக சுட்டு எடுத்தால் சத்தான கருப்பு கொண்டைக்கடலை தோசை தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |