முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து நீளமான அடர்த்தியான கூந்தலுக்கு Protein Hairpack: எப்படி தயாரிப்பது?
இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி விடும்.
முடி உதிர்தல், நரைமுடி, பொடுகு பிரச்சனை, வறண்ட முடி, சொட்டை விழுகுதல் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் நிறுத்திவிடும்.
அடர்த்தியான, நீளமான கூந்தலுக்கு இந்த Protein ஹேர் பேக்கை வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் போதுமானது. இதனை எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்
- பச்சை பயிறு- 3 ஸ்பூன்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- கரிசலாங்கண்ணி பொடி- 2 ஸ்பூன்
- முட்டை- 1
- விளக்கெண்ணெய்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சைப்பயிறு மற்றும் வெந்தயத்தை சேர்த்து 2 முறை கழுவி ஒரு நாள் இரவு முழுக்க ஊறவைத்து கொள்ளவும்.
ஒரு நாள் இரவு முழுக்க ஊறவைத்த பச்சைப்பயிறு மற்றும் வெந்தயத்தை நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அரைத்த கலவையை ஒரு வடிகட்டி வைத்து மற்றொரு பாத்திரத்தில் வடித்து எடுத்துக்கொள்ளவும்.
அதில் கரிசிலாங்கண்ணி பொடி, முட்டை மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து அன்றாட பயன்படுத்தும் எண்ணெய் பயன்படுத்தி உச்சந்தலை முதல் அடிமுடி வரை நன்கு தேய்த்து மசாஜ் செய்துக்கொள்ளவும்.
எண்ணெய் தடவி 2 மணி நேரம் கழித்து இந்த ஹேர்பேக்கை தலையில் போட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |