வெறும் ரூ.10: புரதச்சத்து நிறைந்த சூப்பர் உணவுகள்
Protein Rich Foods: நோயற்ற வாழ்வுக்கு ஆரோக்கியமான உணவும், சீரான உடற்பயிற்சியும் அவசியம், உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதிலும் தசைகளின் வளர்ச்சிக்கும் புரதம் அவசியமாகிறது, இந்த பதிவில் மிக குறைவான விலையில் கிடைக்கும் புரதச்சத்து நிறைந்த 6 உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
வறுத்த கொண்டைக்கடலை
புரதம் நிறைந்த ஆகச்சிறந்த உணவு வறுத்த கொண்டைக்கடலை, விலையும் மிக குறைவானது. இரும்புச்சத்து, தாதுக்கள் நிறைந்த கொண்டைக்கடலை வயிறு நிறைந்த உணர்வை தருவதால் உடல் எடையை குறைப்பதிலும் உகந்தது. இரத்தத்தில் சர்க்கரை அளவை மிக மெதுவாக அதிகரிப்பதால் சர்க்கரை அளவை சீராக வைப்பதுடன் உடனடி ஆற்றலை தருகிறது.

அவித்த முட்டைகள்
கால்சியம், விட்டமின் டி மற்றும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய அமிலங்கள் நிறைந்த அவித்த முட்டைகள் விலை குறைவான அதேசமயம் சிறந்த புரத மூலமாகும். கலோரிகள் குறைவானது, நீண்டநேரம் வயிறு நிறைந்த உணர்வை தருவதால் பசியை கட்டுப்படுத்துகிறது, எலும்புகளை பலப்படுத்துகிறது.
வேர்க்கடலை
நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு சத்து, விட்டமின் ஈ நிறைந்துள்ளதால் இதயத்தை பலப்படுத்துகிறது, உடனடி ஆற்றலை தருகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது. இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிடுவதால் ஊட்டச்சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படுகிறது, அவித்து கேரட், வெங்காயம், தக்காளி சேர்த்து சாலட்டாக சாப்பிடுவது ஆரோக்கியமான மாலை நேர சிற்றுண்டியாகும்.

முளைக்கட்டிய தானியங்கள்
புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த, சத்தான மற்றும் குறைந்த செலவிலான உணவாகும். இவற்றுடன் துருவிய காய்கறிகள் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கப்பெறும்.
தயிர்
தயிர் மற்றும் Greek Yogurt ஆகியவை செரிமானத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் துணைபுரியும், மலிவு விலையிலான மற்றும் புரதச்சத்து நிறைந்த தேர்வுகளாகும். அலுவலகத்தில் வயிறு நிரம்பும் சிற்றுண்டியாக இவற்றை பழங்கள் அல்லது கொட்டைகளுடன் சேர்த்து உண்ணலாம்.
பன்னீர்
பாலில் இருந்து கிடைக்கப்பெறும் சைவ புரத மூலம் பன்னீர் ஆகும், கால்சியமும் நிறைந்திருப்பதால் எலும்புகள் வலுப்பெறும். இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் இதயத்தின் செயல்பாட்டை சீராக வைக்கிறது.
