காலை உணவிற்கு சத்தான புரோட்டின் ஸ்மூத்தி.., எப்படி தயாரிப்பது?
காலை உணவை தொடர்ச்சியாக தவிர்த்து வந்தால் அல்சர் மற்றும் வயிற்றுப் புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
காலை உணவை தவிர்ப்பவர்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வர உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
அந்தவகையில், சத்தான புரோட்டின் நிறைந்த ஸ்மூத்தி எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முந்திரி- 10
- பாதாம்- 10
- பேரிச்சம்பழம்- 3
- வாழைப்பழம்- 2
- வெல்லம்- 1 ஸ்பூன்
- பால்- 2 கப்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் முந்திரி, பாதாம், பேரிச்சம்பழம், வாழைப்பழம் மற்றும் வெல்லம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பின் இதில் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து இதனை ஒரு கப்பில் ஊற்றி நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தாவை நறுக்கி அதன் மேல் போட்டு குடிக்கலாம்.
காலை உணவை தவிர்ப்பவர்கள் இந்த பானத்தை தினமும் தொடர்ந்து குடித்து வர உடலிற்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |