இங்கிலாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்
Hundreds of protesters gathered in Portsmouth against asylum seekers: போர்ட்ஸ்மௌத் துறைமுகத்தில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் பெரும் பரபரப்பு உருவானது.
நேற்றிரவு, சிறுபடகொன்றில் வந்துகொண்டிருந்த சுமார் 140 புகலிடக்கோரிக்கையாளர்களை, அதிகாரிகள், போர்ட்ஸ்மௌத் துறைமுகத்துக்கு அழைத்துவருவதாக செய்தி பரவியுள்ளது.
துறைமுகத்தில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்
சிறிது நேரத்தில், நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு வந்து குவிந்துள்ளார்கள்.

அதிகாரிகள் அந்த புகலிடக்கோரிக்கையாளர்களை Manston என்னுமிடத்திலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் பரிசீலனை மையத்துக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள், புகலிடக்கோரிக்கையாளர்கள் பயணிக்கும் வாகனங்கள் நகராமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டதாகவும், பொலிஸ் வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.
பின்னர், அதிகாலை 3.00 மணியளவில், கலைந்துபோக உத்தரவிடும் ஆணையுடன் வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்துபோக அதிகாரிகள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துபோயிருக்கிறார்கள்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களில், டேனியல் தாமஸ் என்பவரும் ஒருவர். சில மாதங்களுக்கு முன், பிரித்தானியாவிலிருந்து சிலர் பிரான்சுக்கே சென்று, அங்கிருந்த சிறுபடகுகளையும், இயந்திரங்களையும் அடித்து நொறுக்கிய சம்பவம் நினைவிருக்கலாம்.
அவர்களில், முதன்மையானவர் இதே தாமஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |