புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த எதிர்ப்பு: லண்டனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த அதிரடிச் செயல்
லண்டனில், இன்று காலை, புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த எதிர்ப்பு தெரிவித்த ஒரு கூட்டம் ஆர்ப்பாட்டக்காரர்கள், புலம்பெயர்ந்தோரை கொண்டு செல்லும் பேருந்தை சேதப்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த எதிர்ப்பு

Credit: AFP
இன்று காலை 8.00 மணியளவில், லண்டனிலுள்ள Peckham என்னுமிடத்தில் அமைந்துள்ள Best Western hotel என்னும் ஹொட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் சிலரை, Dorset என்னுமிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள Bibby Stockholm barge என்னும் மிதவைப்படகில் ஏற்றுவதற்காக பேருந்து ஒன்று வந்துள்ளது.
தகவலறிந்த ஒரு கூட்டம் ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த பேருந்தை சூழந்துகொண்டார்கள். கையில் ட்ரம்கள், ட்ரம்பட்களுடன் திரண்ட அவர்கள் புலம்பெயர்ந்தோரை பேருந்தில் ஏற்றவிடாமல் தடுத்தார்கள்.

Credit: Alamy
எல்லைகள் வேண்டாம், தேசங்கள் வேண்டாம், நாடுகடத்தல்களை நிறுத்துங்கள் என்றும், கைதுகள் வேண்டாம், விமானங்கள் வேண்டாம், அகதிகளுக்கும் மனித உரிமைகள் உள்ளன என்றும் குரல் எழுப்பினார்கள் அவர்கள்.

Credit: LNP
பொலிசார் எச்சரிக்கை
அத்துடன், புலம்பெயர்ந்தோரை ஏற்ற முயன்ற பேருந்தின் டயர்களையும் ஆர்ப்பட்டக்காரர்கள் சேதப்படுத்தினார்கள்.

Credit: LNP
8.40 மணியளவில் அங்கு வந்த பொலிசார், ஆர்ப்பட்டக்காரர்களை கைது செய்வோம் என அச்சுறுத்தியுள்ளார்கள்.
புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள புலம்பெயர்ந்தோர் தலைமறைவாகலாம் என்ற அச்சத்தில், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிசார் துவங்கியுள்ளார்கள்.

Credit: LNP
இப்படிப்பட்ட சூழலில், புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக சிலர் திரண்ட சம்பவம் பெருமளவில் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Credit: PA

Credit: LNP

Credit: Getty

Credit: LNP
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |