மூன்றாவது நாளாக புதிய பொலிஸ் சட்டத்திற்கு எதிராக போராட்டம்: மேலும் 10 பேர் கைது
இங்கிலாந்தில் பிரிஸ்டல் நகரத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிய பொலிஸ் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
போராட்டத்துக்கு மத்தியில் ஆர்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் மேலும் 10 பேரை பொலிஸ் கைது செய்துள்ளனர்.
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் படையினர் மீது கற்களையும் கண்ணாடி போத்தல்களையும் வீசியுள்ளனர். 'Kill The Bill', 'Shame on You' உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
இந்த புதிய பொலிஸ் மசோதா அமுல்படுத்தப்பட்டால், வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாத அளவுக்கு பொலீஸுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்படும் என்பதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்டதற்காகவும், அவசரகால பாதுகாப்பது அதிகாரியை தாக்கியதற்காகவும் மற்றும் Class A போதைப்பொருள் வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 10 பேர் கைது செய்யப்பட்டனர் என்று உள்ளூர் Avon and Somerset காவல்துறை கண்காணிப்பாளர் Mark Runacres தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலானோர் கொரோனா விதிமுறைகளை பிறப்பற்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.


