ஏற்கனவே கணவருடன் பிரச்சனை.., பெண் உயிரிழந்ததால் வரதட்சணையை திருப்பிக் கேட்டு போராட்டம்
பெண் உயிரிழந்ததால் வரதட்சணை நகையை திருப்பிக் கொடுக்குமாறு பெண் வீட்டார் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பெண் வீட்டார் போராட்டம்
இந்திய மாநிலமான தெலங்கானாவில் திருமணமான 3 ஆண்டுகளிலே பெண் உயிரிழந்ததால் வரதட்சணை பணம் ரூ.50 லட்சம் மற்றும் 35 சவரன் தங்க நகையை திருப்பிக் கொடுக்கக் கோரி பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த பெண்ணிற்கு அவருடைய கணவர் சுரேஷ் உடன் ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது. இதனால் அவரது மனைவி லாவண்யா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், லாவண்யா தனது தந்தையுடன் பைக்கில் சென்ற போது விபத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இதனால், சுரேஷ் வீட்டின் முன்பு இருவரது உடல்களை வைத்து லாவண்யாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர், பெண்ணின் குடும்பத்திற்கு கணவரது குடும்பம் ரூ.20 லட்சம் கொடுக்க முன்வந்ததை அடுத்து அவர்களுக்கு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |