ஜேர்மனி வந்துள்ள நாடொன்றின் ஜனாதிபதி: கடும் எதிர்ப்பு
சிரியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியான அஹ்மத் அல் ஷரா ஜேர்மனிக்கு அரசு முறைப்பயணமாக வருகைபுரிந்துள்ளார்.
சிரியா நாட்டின் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு
ஜேர்மனி வந்துள்ள சிரியா ஜனாதிபதியான அஹ்மத் அல் ஷராவுக்கு ஜேர்மன் ஜனாதிபதியான ஃப்ராங்க் வால்ட்டர் ஸ்டெயின்மேயர் வரவேற்பளித்த நிலையில், அவர் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸையும் சந்திக்க இருக்கிறார்.

ஆனால், அஹ்மத் அல் ஷராவின் வருகைக்கு ஜேர்மனியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
குர்திஷ் இன அமைப்புகள் அஹ்மத் அல் ஷரா மீது மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், அரசியல் கட்சியினரும் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

பல்வேறு இடங்களில் அஹ்மத் அல் ஷராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், சுமார் 5,000 பேர் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கக்கூடும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |