பள்ளி மாணவி மர்ம மரணம்! போராட்டத்தில் வெடித்த வன்முறை..தமிழகத்தில் பரபரப்பு

Tamil nadu
By Fathima Jul 17, 2022 07:13 AM GMT
Report

தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் 12ஆம் வகுப்பு மாணவி மரணமடைந்ததால் நடைபெற்று வரும் போராட்டம் வன்முறையாக வெடித்தது.

கடலூர் மாவட்டம், பெரியநெசலூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது 17 வயது மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 13ஆம் திகதி மாணவி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக, பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு தகவல் அளித்தது.

மேலும், பள்ளிக்கு விரைந்த பொலிசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் மாணவியின் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்ற போது, அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.

பள்ளி மாணவி மர்ம மரணம்! போராட்டத்தில் வெடித்த வன்முறை..தமிழகத்தில் பரபரப்பு | Protest In Kallakurichi Girl Student Death

தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், மாணவியின் இறப்பிற்கு முன்பே அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டதாகவும், உள்ளுறுப்புகளின் ரசாயன பகுப்பாய்வு அறிக்கை வெளியானால் தான் மாணவி எப்படி இறந்தார் என முழுமையாக தெரிய வரும் என்றும் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமானது. அரசு மருத்துவமனை முன்பு மாணவியின் குடும்பத்தாரும், சில கட்சியினரும் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பொலிசார் மீது அவர்கள் கற்கள், கண்ணாடி போத்தல், செருப்பு ஆகிய பொருட்களை வீசியதால் பதற்றம் உருவானது.

பள்ளி மாணவி மர்ம மரணம்! போராட்டத்தில் வெடித்த வன்முறை..தமிழகத்தில் பரபரப்பு | Protest In Kallakurichi Girl Student Death

அத்துடன் பொலிசாரின் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டதால் போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பொலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பள்ளி மாணவி மர்ம மரணம்! போராட்டத்தில் வெடித்த வன்முறை..தமிழகத்தில் பரபரப்பு | Protest In Kallakurichi Girl Student Death

போராட்டக்காரர்களின் தாக்குதலால் காயமடைந்த பொலிசார் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.       

3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US