பாரிஸ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்... ரஃபா தாக்குதலுக்கு கடும் கண்டனம்
காஸா நகரமான ரஃபா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாரிஸ் நகரில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு சுமார் 10,000 பேர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஸாவை விடுவியுங்கள்
இஸ்ரேல் தூதரகத்தில் இர்ந்து சில நூறு மீற்றர்கள் தொலைவில் தொடர்புடைய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் காஸா பிள்ளைகளே, காஸாவை விடுவியுங்கள் உள்ளிட்ட முழக்கங்களையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் எழுப்பியுள்ளனர்.
ரஃபாவில் உள்ள ஹமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் ஒரு நாளுக்குப் பிறகு இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனிடையே ரஃபா மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது. இது திட்டமிடப்பட்ட படுகொலை என்றே சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாதுகாப்பான பகுதி என மொத்த மக்களையும் ரஃபாவுக்கு அனுப்பி வைத்து, தற்போது ரஃபா மீது தாக்குதலை தொடுக்கும் இஸ்ரேலின் திட்டம் கொடூரத்தின் உச்சம் என்றே தெரிவிக்கின்றனர்.
ஏற்றுக்கொள்ள முடியாது
மக்கள் போருக்கு தப்பி ரஃபாவில் கூடாரங்கள் அமைத்து தங்கிவரும் நிலையில், நெருப்பு வைப்பது மிருகத்தனம் எனவும், மக்களை உயிருடன் கொளுத்துவதும், பிரான்ஸ் அரசாங்கம் இதுவரை இஸ்ரேல் தூதரை அழைத்து விளக்கம் கோரவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார் பாலஸ்தீன ஆதரவு அமைப்பின் François Rippe.
ஆர்ப்பாட்டத்தின் போது பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் புகைப்படங்களுடன் கூடிய பதாகைகளில்,
இவர்கள் படுகொலை செய்வது மனிதத்தன்மையை என குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, ரஃபா தாக்குதலுக்கு எதிராக பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |