கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர்..சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை
இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயாத்துல்லா காமெனி கொல்லப்பட்டதற்கு, சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்தை இஸ்லாமிய அமைப்புகள் முற்றுகையிட்டன.
ஈரானின் உச்ச தலைவர்
இஸ்ரேல் - அமெரிக்க கூட்டுப் படைகளால் ஈரானின் உச்ச தலைவர் அயாத்துல்லா அலி காமெனி (Ayatollah Ali Khamenei) கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது வரலாறு காணாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தப்போவதாக ஈரானின் புரட்சிகர காவல் படை எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தினை இஸ்லாமிய அமைப்புகள் முற்றுகையிட்டன.
உலகப்போருக்கு வழிவகுக்கிறது
இதில் கருணாஸ், தனியரசு உள்ளிட்டோர் ஈடுபட்டனர். அவர்கள், "ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்தியா அமைதியாக இருப்பது நல்லதல்ல. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் உலகப்போருக்கு வழிவகுக்கிறது" என்றனர்.
இதற்கிடையில், மூன்று உதவி ஆணையர்கள் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான பொலிஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் தூதரகத்தை சுற்றியுள்ள கதீட்ரல் சாலை, அவ்வை சண்முகம் சாலை, பீட்டர்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |