பொலிஸை தாக்கிய போராட்டக்காரர்கள்; பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டனம்!
பிரித்தானியாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தாக்கியதற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரிஸ்டலில் ஆயிரக்கணக்கான ஆர்பாட்டக்காரர்கள் புதிய பொலிஸ் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு எதிராக 'Kill The Bill' போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 3 நாட்களாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் 30க்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு நடந்த ஆர்பாட்டத்தின்போது, பொது மக்கள் திடீரென பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நகர பொலிஸ் அதிகாரிகளை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது வன்முறையில் ஈடுபட்ட 10 பேரை நேற்று பொலிஸ் கைது செய்தனர்.
இந்த நிலையில், பொலிஸ் மீது மக்கள் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டனம் தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், பிரிஸ்டலில் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக இழிவான தாக்குதல்கள் நடந்துத்துள்ளன.
பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து வன்முறையை கையாளும் ஒரு கும்பல் கற்கள், போத்தல்கள் மற்றும் பட்டாசுகளால் தாக்குவதை அதிகாரிகள் எதிர்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.
காவல்துறைக்கும் நகரத்துக்கும் எனது முழு ஆதரவு உண்டு என பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


