பிரித்தானியாவின் டோவர் துறைமுகப் பகுதியில் முகமூடி அணிந்த போராட்டக்காரர்களால் பதற்றம்
Masked protesters block roads in Dover: டோவரில் முகமூடி அணிந்த குடியேற்ற எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்தனர்.
முகமூடி அணிந்த குடியேறிகளுக்கு எதிரான போராட்டக்காரர்கள் பெருந்திரளாக டோவர் துறைமுகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் சாலைகளில் திரண்டதால் நகரம் ஸ்தம்பித்தது.

இன்று காலை கென்ட்டில் நிலவிய குழப்பங்களுக்கு மத்தியில், பிரித்தானியாவின் மிகவும் பரபரப்பான படகுத் துறைமுகத்தை அணுகுவதற்காக விடுமுறைக்கு வந்தவர்களும் சரக்கு லொறிகளும் பெரும் வரிசைகளில் சிக்கித் தவித்தன.
தினமும் சுமார் 25,000 வாகனங்கள் கடந்து செல்லும் துறைமுகத்தைச் சுற்றியுள்ள பரபரப்பான சாலைகளை முகமூடி அணிந்த குழுவினர் மறித்துள்ளனர்.
கலவரம் அல்லது குழப்பமான சூழலைத் தொடர்ந்து சம்பவயிடத்திற்கு பொலிசார் விரைந்துள்ளதாகவும், சம்பவ இடத்தில் அவர்கள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
A20 சாலை இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளதை தேசிய பிரதான சாலைகள் நிர்வாகம் உறுதிப்படுத்தியதுடன், போராட்ட நடவடிக்கைகளால் நான்கு மைல் நீளத்திற்கு வாகன வரிசைகள் ஏற்பட்டுள்ளதாகவும் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, கென்ட் கவுண்டி கவுன்சிலுக்கான, Reform UK கவுன்சிலர் ஜான் பேக்கர் தெரிவிக்கையில், இது சட்டவிரோத புலம்பெயர் மக்களின் படகுகளை மறிக்கும் போராட்டம் என தாம் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதை உறுதி செய்யவில்லை. லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Mike Tapp போராட்டக்காரர்களைக் கடுமையாக விமர்சித்ததுடன், டோவருக்கு வந்து குழப்பம் விளைவிக்கும் முட்டாள்கள் என்றும் சாடியுள்ளார்.
இதனிடையே, கிழக்குத் துறைமுக வட்டச் சாலையிலிருந்து கோர்ட் வுட் சந்திப்பு வரையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், அணுகுசாலையில் 30 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்படுவதோடு, 4 மைல் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலும் நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |