உடனடி போர் நிறுத்தம்... லண்டன் நகரை உலுக்கிய பாலஸ்தீன ஆதரவு பேரணி
இஸ்ரேல் - ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி மத்திய லண்டனில் இன்று சுமார் 100,000 மக்கள் திரண்டு பேரணியில் ஈடுபட்டனர்.
உடனடி போர் நிறுத்தம் வேண்டும்
லண்டனில் இன்று முன்னெடுக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு பேரணியில் 100,000 பேர்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலஸ்தீன விடுதலை கோரி முழக்கமிட்ட மக்கள், கைகளில் பாலஸ்தீன கொடிகள் மற்றும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
@reuters
மட்டுமின்றி உடனடி போர் நிறுத்தம் வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தனர். மத்திய லண்டனில் தொடங்கிய இந்த பேரணி, பிரதமர் ரிஷி சுனக்கின் உத்தியோகப்பூர்வ இல்லம் முன்பு முடிவடைந்தது.
ஏற்கனவே திட்டமிட்டபடி 100,000 மக்கள் இந்த பேரணியில் திரண்டுள்ளனர். பேரணியில் கலந்துகொண்ட பெண் ஒருவர் தெரிவிக்கையில், பாலஸ்தீன நாட்டவரான தாம் ஒரு நாள் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என ஆசைப்படுகிறேன். காஸாவில் குடும்பத்தினர் உள்ளனர்.
@reuters
பாலஸ்தீன விடுதலை தொடர்பில் தீவிர நடவடிக்கை தேவை என குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் தற்போதைய சூழலில் பேரணி ஒன்றே தீர்வாக உள்ளது என்றார். பேரணியில் பலர் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர்.
யூத எதிர்ப்பு குற்றங்கள்
ஒருவர் ஏந்தியிருந்த பதாகையில் போர் குற்றவாளிகள் என குறிப்பிட்டு, பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.
மாநகர பொலிசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர், தடை செய்யப்பட்ட இயக்கமான ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது குற்றச்செயல் எனவும், கைது நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
@reuters
ஆனால் சுமார் 100,000 மக்கள் திரண்ட பேரணி மிக அமைதியாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், பிரித்தானியாவில் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் அக்டோபர் மாதத்தில் யூத எதிர்ப்பு குற்றங்கள் 1,353 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் இஸ்லாமிய எதிர்ப்பு குற்றங்கள் 140 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Credit: Matt Spivey
இன்று நடந்ததைப்போன்ற ஒரு ஆர்ப்பாட்டம் கடந்த வாரமும் முன்னெடுக்கப்பட்டது, குறித்த பேரணியிலும் திரளான மக்கள் கலந்துகொண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்களில் 15 பேர் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைதாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |