பாரிஸில் போராட்டத்தில் குதித்த ஆயிரக்கணக்கான மக்கள்! ஏதற்காக?
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஆயிரக்கணக்கான மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்ஸில் தற்போது வரை 6.8 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, மேலும் 1,15,000 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், தடுப்பூசி போட்டதற்கான அல்லது தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சிறப்பு ஹெல்த் பாஸ் உட்பட கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார்.
பிரான்ஸ் எம்.பி.க்கள் ஜூலை மாதம் ஒரு மசோதாவை நிறைவேற்றினர்.
அந்த மசோதாவின் படி மருத்துவத் தொழிலாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட வேண்டும் இல்லையெனில் பணியிடை நீக்கம் அல்லது சம்பள முடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதாகும்.
ஆகஸ்ட் தொடக்கத்தில் பிரான்ஸ் நீதிமன்றம் எம்.பி.க்கள் நிறைவேற்றிய கட்டுப்பாடுகளை உறுதி செய்தது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பிரான்ஸ் பொதுமக்கள் பொது இடங்களில் நுழைவதற்கு ஹெல்த் பாஸ் அல்லது தொற்று பாதிப்பு இல்லை என்ற சோதனை முடிவு கட்டாயமாக்கப்பட்டது.
#Paris
— Wisti-ti ?? (@Wistiti84470505) September 4, 2021
?..Cc @BFMTV @CNEWS ..combien de personnes à vue d’œil..100,300,302..⁉️???#manifestation4septembre #Passanitaire #France #AntiPassSanitaire #DictatureSanitaire #Manifs4septembre
pic.twitter.com/oPsEkr0XAY
இந்நிலையில், பிரான்ஸ் அரசாங்கத்தின் கட்டாய ஹெல்த் பாஸ் மற்றும் குடிமக்களில் சில பிரவினருக்கு கட்டாய தடுப்பூசிக்கு எதிராக தலைநகரில் பாரிஸில் ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
??? France - Francia - #Manifs4septembre
— Marto Pirlo (@martopirlo1) September 4, 2021
Ambiance de feu ?à #Paris à la manif pour dire non au pass sanitaire à l'appel de F.Philippot #manifestation4septembre
Video ⤵️pic.twitter.com/UfsPx9isQI
குறித்து கட்டுப்பாடுகளை நீக்க கோரி போராட்டகாரர்கள் பாரிஸ் நகரில் பேரணி நடத்துவருகின்றனர்.