பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்கும் ஹொட்டலை முற்றுகையிட்ட பேட்ரியாட் போராட்டக்காரர்கள்
Protesters surround Pakistan cricket team hotel: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்கியிருந்த ஹொட்டலை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
புலம்பெயர்ந்தவர்கள் என்ற வதந்தி பரவியதை அடுத்து, பதின்வயது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்கியிருந்த ஹொட்டலை, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டக்காரர்கள் குழு ஒன்று முற்றுகையிட்டது.
வதந்தி பரவியது
இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமையன்று போர்ட்ஸ்மத்தில் உள்ள மேரியட் ஹொட்டலுக்குள் பேருந்தில் வந்திறங்கிய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியை, உள்ளூர்வாசிகள் பார்த்துள்ளனர்.

இதனையடுத்தே அவர்கள் புலம்பெயர்ந்தோர் என வதந்தி பரவியது. ஆனால், சுமார் 50 பேர்கள் கொண்ட ஒரு குழு அதற்குள் அந்த ஹொட்டலை முற்றுகையிட்டுள்ளது.
இந்த நிலையில், Reform UK அரசியல்வாதியான George Madgwick, உண்மையில் அவர்கள் கிரிக்கெட் வீரர்கள் தானா என்பதை உறுதி செய்ய ஹொட்டலுக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹொட்டல் நிர்வாகம், அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்பதை விளக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தன்னிடம் நேரில் வந்து பேசியதாகவும்; அப்போது அதற்கான ஆதாரத்தை அவர்கள் காண்பித்ததாகவும்,
பின்னர், ஹொட்டலுக்கு வெளியே கூடியிருந்த 40 முதல் 50 பேர் கொண்ட பேட்ரியாட் போராட்டக்காரர்களிடம் பேசி, அது ஒரு கிரிக்கெட் அணிதான் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்தியதாகவும் George Madgwick தெரிவித்துள்ளார்.
உடனடியாகக் கூடியிருந்த கூட்டம் அதை மரியாதையுடன் ஏற்றுக்கொண்டு, அமைதி நிலவச் செய்ததுடன், மற்றவர்களையும் அங்கிருந்து உடனடியாகக் கிளம்பிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டது. ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவறாக நினைத்திருக்கலாம்
மேலும், போர்ட்ஸ்மவுத்தில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்ல உள்விவகார அமைச்சகம் பயன்படுத்திய அதே பேருந்து நிறுவனத்தைத்தான் கிரிக்கெட் வீரர்களும் பயன்படுத்தினார்கள் என்பதால், உள்ளூர் மக்கள் அவர்களையும் புலம்பெயர்ந்தோர் எனத் தவறாக நினைத்திருக்கலாம் என்றும் விளக்கமளித்துள்ளார்.

இதனிடையே, போர்ட்ஸ்மவுத்தில் உள்ள RNLI தலைமையகத்திற்கு வெளியே மற்றொரு போராட்டம் நடைபெற்றது. அங்கு, கடலில் மக்களைக் காப்பாற்றியதற்காகக் கடலோரக் காவல்படையினரைக் கண்டித்து சுமார் ஒரு டசினுக்கும் அதிகமான பேட்ரியாட் போராட்டக்காரர்கள் திரண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு, ஆங்கிலக் கால்வாயைக் கடந்து கொண்டிருந்த ஒரு பெரிய ரப்பர் படகில் இருந்த சுமார் 140 புலம்பெயர்ந்தோரை RNLI தன்னார்வக் குழுவினர் மீட்டனர். இது, போர்ட்ஸ்மவுத்தின் ஈஸ்ட்னி பகுதியில் தீவிர வலதுசாரிகளின் கடுமையான போராட்டங்களையும் கடல் முற்றுகைகளையும் தூண்டியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |