இலங்கை - அவுஸ்திரேலியா போட்டி! கிரிக்கெட் மைதானத்தில் புகுந்த போராட்டக்காரர்கள்.. ஏற்பட்ட பரபரப்பு
இலங்கை - அவுஸ்திரேலியா போட்டி நடைபெறும் கலே மைதானத்துக்குள் போராட்டக்காரர்கள் புகுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய பதவி விலக வலியுறுத்தி நடக்கும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் இலங்கையின் கலே மைதானத்தில் இலங்கை - அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
போட்டி நடக்கும் காலே மைதானத்தில் போராட்டக்காரர்கள் திடீரென புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிக்களுக்கிடையில் 2 ஆவது டெஸ்ட் போட்டி இடம்பெற்றுவரும் நிலையில் காலி கிரிக்கெட் மைதானத்தை சுற்றி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்#GoHomeGota2022 #SriLanka #SriLankaCrisis #SriLankaProtests pic.twitter.com/Am4RnP1Snp
— I'm Rasiya ☕️? (@Rasiya_Twitz) July 9, 2022