லண்டனில் கருக்கலைப்பு சட்டத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!
கருக்கலைப்பு உரிமைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பேரணி நடத்திய அதே நேரத்தில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிகளின்படி, கர்ப்பத்தின் 6 வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அமெரிக்க சட்டத்தின்படி, விதிமுறையை மீறும் டெக்சாஸ் கருக்கலைப்பு வழங்குநர்கள் மீது எந்த தனிப்பட்ட குடிமகனும் வழக்குத் தொடர அனுமதிக்கிறது.
இதய துடிப்பு சட்டம் என அழைக்கப்படும் டெக்சாஸ் சட்டம், அல்ட்ராசவுண்ட் கருவி கருவின் இதயத் துடிப்பைக் கண்டறிந்த பிறகு கருக்கலைப்பைத் தடை செய்கிறது.
இதில் சிக்கல் என்னவென்றால், ஆறு வாரங்களுக்கு முன்பே ஒரு சிலருக்கு கருவில் இதயத்துடிப்பு ஏற்படலாம். இந்த காலக்கட்டம் முடிவெடுப்பதற்கு போதுமான காலமாக தோன்றவில்லை ஏனெனில் பல பெண்களுக்கு தாங்கள் கர்ப்பமாக இருப்பதை அறிவதற்கே 6 மாதங்களுக்கு மேல் தேவைப்படலாம்.
கருக்கலைப்பு தடை தாயின் உயிரைக் காப்பாற்றும் என்றால், அதற்கு மருத்துவ விதிவிலக்குகளை அளிக்கிறது, ஆனால் கற்பழிக்கப்பட்டாலோ அல்லது உடலுறவால் தேவையின்றி கர்ப்பம் ஆனாலோ அதற்கு இந்த சட்டம் விலக்கு அளிக்காது. மேலும் கருக்கலைப்பு வழங்குபவர்களுக்கு எதிராககவும் எவரும் வழக்குத் தொடர புதிய சட்டம் அனுமதிக்கிறது.
இந்த நிலையில், சனிக்கிழமையன்று அமெரிக்காவின் அனைத்து 50 மாநிலங்களிலும் கருக்கலைப்பு உரிமைகளை ஆதரிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணிகளை நடத்தினர். இந்த பேரணி ஞாயிற்றுக்கிழமையும் தொடரும் என கூறப்படுகிறது.
அவர்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் லண்டனில் உள்ள டிராஃபல்கர் சதுக்கம் வழியாக கருக்கலைப்பு உரிமை பிரச்சார பேரணியை நடத்தினர்.