பிரித்தானியா முழுக்க வெடித்த கலவரம்: லண்டனை அடுத்து இன்னொரு பகுதிக்கு விரைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
பிரித்தானியாவில் Southport கத்திக்குத்து சம்பவத்தை அடுத்து தாக்குதல்தாரி குறிப்பிட்ட சமூகத்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நாடு முழுக்க கலவரம் வெடித்துள்ளது.
குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்
பிரித்தானியாவின் லங்காஷயர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் Southport பகுதியில் சிறார்களுக்கான நடன வகுப்பில் நுழைந்து திடீரென்று சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளான்.
இதில் 11 சிறார்கள் உட்பட 13 பேர்கள் படுகாயமடைந்தனர். அவர்களில் மூன்று சிறுமிகள் மரணமடைந்துள்ள சம்பவம், நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல்தாரி மாஸ்க் அணிந்தவர், தலை மூடப்பட்ட நிலையில் தாக்குதல் நடத்தியுள்ளதால், அப்பகுதி மக்களுக்கே அவர் யார் என்பது அடையாளம் காண முடியவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த நபர் பிரித்தானியாவில் பிறந்தவர் என்பது மட்டுமே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட காரணங்களுக்காக அந்த 17 வயது தாக்குதல்தாரி குறித்த தகவல்கள் எதையும் பொலிஸ் தரப்பு வெளியிட மறுத்துள்ளது.
இந்த நிலையில், குறித்த நபர் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை Southport பகுதியில் அமைந்துள்ள மசூதி அருகே திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸ் வாகனங்களுக்கும் நெருப்பு வைத்தனர்.
Southport பகுதி போர்க்களமாக மாறிய நிலையில், கலவரம் பல பகுதிகளில் வியாபித்துள்ளது. தற்போது Hartlepool பகுதியில் கலவரம் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவறான தகவல்களை பரப்பி
இப்பகுதியிலும் மசூதி அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், முர்ரே தெரு தொடங்கி ஷெரிஃப் தெரு முதல் கிரேஞ்ச் சாலை வரையில் தற்போது மூடப்பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்ணாடி போத்தல்கள் மற்றும் பீர் கேன்களையும் வீசியுள்ளனர். அத்துடன் எங்கள் பிள்ளைகளை வன்முறையில் இருந்து காப்பாற்றுங்கள் என முழக்கமிட்டபடியே பொலிசாருடனும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, மான்செஸ்டரில் ஒரு ஆர்ப்பாட்டம் தொடங்கிவிட்டது என்று நம்பப்படுகிறது. Southport பகுதியில் மசூதி ஒன்று தாக்கப்பட்டதுடன், வெடித்த கலவரத்தில் சுமார் 50 பொலிசார் காயமடைந்துள்ளனர்.
EDL என்ற அமைப்பின் ஆதரவாளர்களே, கைதான 17 வயது தாக்குதல்தாரி தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி வருவதுடன், போராட்டங்களை நாடு முழுவதும் தூண்டுவதாக பொலிசார் நம்புகின்றனர்.
கைதாகியுள்ள அந்த 17 வயது நபர் லங்காஷயர் பகுதியில் வசித்து வந்தாலும், Cardiff நகரில் பிறந்துள்ளார். மேலும், சட்ட காரணங்களுக்காக அவர் பெயர் உள்ளிட்ட தரவுகள் எதையும் வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர்.
தற்போது அவர் மீது மூன்று கொலை வழக்கும் 10 கொலை முயற்சி வழக்கும் பதியப்பட்டுள்ளதாக மெர்சிசைட் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |