மன்னராட்சி வேண்டாம்... முடிசூட்டுவிழாவின்போது லண்டனில் கூடி எதிர்ப்பை தெரிவிக்க 1,600 பேர் திட்டம்
மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவின்போது, மன்னராட்சிக்கும், இன்னமும் மன்னராட்சி நீடிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க ஒரு கூட்டம் மக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1,600 பேர் திரள திட்டம்
லண்டனில் உள்ள Trafalgar Square என்னுமிடத்தில் கூட இருக்கும் இந்த மன்னராட்சிக்கு எதிரான நபர்கள், மன்னராட்சி என்பது மக்கள் பணத்தை வீணாக்கும் நடவடிக்கை என்னும் கருத்து கொண்டவர்கள் ஆவர்.
சமீபத்தில் 4,000 பிரித்தானியர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 51 சதவிகிதத்தினர் மன்னருடைய முடிசூட்டுவிழாவிற்கு மக்களுடைய வரிப்பணம் செலவிடப்படக்கூடாது என கருதுவதாக தெரிவித்திருந்தனர்.
mirror
மன்னராட்சிக்கு எதிரான அமைப்பான Republic என்னும் அமைப்பின் முதன்மை செயல் அதிகாரியான Graham Smith என்பவர், இந்த எதிர்ப்பு மன்னருக்கு அல்ல, மொத்தத்தில் மன்னராட்சிக்கு எதிரானது என்கிறார்.
செலவிடப்படும் பெருந்தொகை
மன்னருடைய முடிசூட்டுவிழாவிற்கு சுமார் 250 மில்லியன் பவுண்டுகள் செலவாகலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஆக, முடிசூட்டுவிழா அன்று, ’மன்னராட்சியை ஒழிக்கவேண்டும்’, ’இவர் என்னுடைய மன்னர் அல்ல’ என்று கூறும் பதாகைகளுடனும், முழக்கங்களுடனும், ஆயிரத்துக்கும் அதிகமானோர் கூடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
Image: AP