புரோட்டீன் சத்து நிறைந்த பாலக்கீரை தோசை.., எப்படி செய்வது?
Protien dosa recipe- பாலக்கீரை என்பது இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு சத்தான இலை காய்கறியாகும்.
இது உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டது.
பாலக்கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, கே ஆகியவை நிறைந்துள்ளன.
அந்தவகையில், உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான பாலக்கீரை தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாசிப்பருப்பு- 1 கப்
- பச்சைமிளகாய்- 3
- இஞ்சி- 1 துண்டு
- கொத்தமல்லி- சிறிதளவு
- பாலக்கீரை- 1 கைப்பிடி
- உப்பு- சிறிதளவு
- நெய்- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பாசிப்பருப்பு, பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, பாலக்கீரை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பின் இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து இதில் உப்பு சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து அடுப்பில் வாணல் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி நெய் சேர்த்து பொன்னிறமாக சுட்டு எடுத்தால் சுவையான பாலக்கீரை தோசை தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |