தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் பெருமிதம்! அலி சப்ரி கருத்து
இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கருத்து
தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது அணியினர் குறித்து பெருமிதம் கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது X தளத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
ஒட்டுமொத்த இலங்கை நாடே நெருக்கடியை எதிர்கொண்ட போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிற்கு தலைமை தாங்கி வழிநடத்தியதாக சுட்டுக்காட்டினார்.
மேலும் இலங்கை பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்த போது ஜனாதிபதியே பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாகவே நாடு நல்ல பாதையில் முன்னேற தொடங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |