இங்கிலாந்து வெற்றிக்கு பின் பும்ரா மனைவி வெளியிட்ட ஒற்றை புகைப்படம்! நெகிழ்ச்சி பதிவு
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்தியா வெற்றி பெற்ற நிலையில், அவருடைய மனைவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குறிப்பாக இப்போட்டியில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிக் கொண்டிருந்த போது, அந்தணியின் முக்கிய விக்கெட்டுகளான ஆலி போப் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ்வை பும்ரா தன்னுடைய அசுரவேகத்தின் மூலம் போல்டாக்கி வெளியேற்றினார்.
இது தான் இந்திய அணியின் வெற்றிக்கு திருப்புமுனையாக அமைந்தது.
இந்நிலையில், பும்ராவின் மனைவியான தமிழ் வம்சாவளி சஞ்சனா கணேஷன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பும்ரா விக்கெட் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, உன்னை நினைத்து இன்று மற்றும் என்றென்றும் பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை இணையவாசிகள் டிரண்டாக்கி வருகின்றனர்.