துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களுக்காக..PSG அணி வெளியிட்ட அறிவிப்பு
துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய போட்டிக்கு முன்பாக மௌன அஞ்சலி செலுத்தப்படும் என PSG அணி அறிவித்துள்ளது.
உயரும் பலி எண்ணிக்கை
மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மேலும் இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவும் பாதிப்பிற்கு உள்ளான துருக்கி, சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
@Rami al-Sayed/AFP/Getty
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
PSG அறிவிப்பு
இந்த நிலையில் பிரபல கால்பந்து அணியான பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த சனிக்கிழமை, பிப்ரவரி 11ஆம் திகதி PSG மற்றும் Monaco அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன், ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Une minute de recueillement sera tenue ce samedi 11 février avant la rencontre #ASMPSG en hommage aux victimes des séismes en Turquie et en Syrie.
— Paris Saint-Germain (@PSG_inside) February 11, 2023